பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகியுள்ள ‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, வத்தளையில் உள்ள ‘Ram’ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
ராகலையை சேர்ந்த ரொணி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கேற்புடன் படத்தின் பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
சகிஷ்ணா சேவியரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ‘கூத்தாடி’ என்ற பாடலை சாய்சரண் பாடியுள்ளதுடன், சதீஷ்காந்த் தம்பிரத்தினம் வரிகளை எழுதியுள்ளார். ‘நெஞ்சநதி’ பாடலுக்கான வரிகளை இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவே எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கு மேலதிகமாக, மலையாள மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













Comments (0)
Be the first to share your thoughts.