#மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று வரை எந்தவிதமான முறைப்பாடும் செய்யப்படாத அனோஜனின் வழக்கு #வழக்காடுவதற்காக 19 லட்சம் பெற்றுக் கொண்டு இலங்கை வெளிநாட்டு அமைச்சு! #கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் தாதியரின் சீருடை விவகாரத்திற்கும் அனோஜனின் மரண தண்டனைக்கும் என்ன தொடர்பு ? #அனோஜனின் வழக்கு விடயத்தில் உண்மையில் நடந்தது என்ன ? #கள நிலவரஅறிக்கை "சிவராசா அனோஜன்கைது விவகாரம் இன்று வரை நடந்தவை" #அனோஜன் கைது செய்யப்படுவதற்கு யாரெல்லாம் முயற்சி செய்தார்கள் என்பதை பேசி நேரம் செலவிடுவதை விட சுருக்கமாக, உலகெல்லாம் உள்ள இஸ்லாமியர்களின் வலை அமைப்போடு கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டார்கள் அவ்வளவுதான் . #கைது இடம்பெற்று அவருக்கு ஐந்து வருட தண்டனை வழங்கப்பட்டதும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து அவரது சகோதரருக்கு நேரடியாக பல தடவைகள் அழைப்பு எடுத்து அவர்களுக்கு சட்டரீதியாக உதவமுட்பட்ட போதும் அவர் அரசாங்கம் இதில் தலையிட்டுள்ளது எனவே வேறு யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கூறி மறுத்து விட்டார் . #ஒரு கட்டத்தில் பின்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு அழைப்பையும் அவர் ஏற்று கதைப்பதை நிறுத்திவிட்டார் #ரஜீவ்காந்த் எனப்படும் நபர் இந்த வழக்கில் தலையிட்டு பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தாரை மனித உரிமை ஆணைக்குழு பக்கம் செல்ல விடாது தடுத்துள்ளார் #இந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை கனடா விசிட் விசாவில் சென்று அங்கு உள்ளனர் இந்த நபர் தான் அங்கு சென்று அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்வதற்காக இங்கு ஆவணங்களை பலப்படுத்துவதற்காக இவ்வாறு மேற்கொள்கிறார் . #இலங்கை வெளிநாட்டு அமைச்சு குறித்து மேல்முறையீட்டு வழக்கில் அமர்த்திய சட்டத்தரணிக்கு கொடுக்கும் கட்டணமாக இலங்கை ரூபாய் 19 லட்சத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் இருந்து பெற்றுள்ளனர் அதற்கான, பைப்பு சீட்டு ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது . #இலங்கை வெளிநாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி நீதிமன்றத்தில் எந்த ஒரு வார்த்தையும் கதைக்கவில்லை என்றுஅனோஜனால் அவரது சகோதரருக்கு கூறப்பட்டுள்ளது அத்துடன் அவர் ஒரு இளநிலை சட்டத்தரணி எனவும் ஆனால் அரசு தரப்பில் இரண்டு சிரேஷ்ட சட்டத்தரணிகள் வாதாடினார்கள் என்றும் கூறியுள்ளனர். #சவுதி அரேபியா சட்டவிதிகளின் படி இவ்வாறான மத நிந்தனை வழக்குகளுக்கு அவர்களால் வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனையை 5 வருட சிறை தண்டனை ஆகும் #அதன் பின் உடனடியாக உரிய ஆதாரங்களை கொடுத்து மேல்முறையீடு செய்து தண்டனையை குறைக்காத விட்டால் அடுத்த கட்டம் மரண தண்டனை என்பது அங்கு எழுதப்படாத விதியாக உள்ளது. #அனோஜனின் மேல்முறையீட்டு வழக்கு நடக்கும் திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர் தூக்கிலிடப்பட்டுள்ளார் #சர்வதேச மன்னிப்பு சபையை சார்ந்தவர்களிடம் பேசும் போது அவர்கள் இது அங்கு வழமையாக நடைபெறும் ஒரு சம்பவம் என்று கூறுகின்றனர் . #இந்த வழக்கில் குடும்பத்தாரிடம் ஒரு சில தரப்பினர் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு மனு அனுப்புகிறோம் எனக் கூறி வெற்று பத்திரத்தில் கையொப்பம் பெற்றிருக்கின்றனர் ஆனால் அவர்கள் இதுவரை ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவித ஆவணமும் அனுப்பவும் இல்லை இந்த விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது. #மன்னரை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வல தொண்டர் பல சட்ட அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு வெளிநாட்டிலிருந்து ஒரு நிபுணத்துவம் பெற்ற சட்டத்தரணியை இந்த வழக்குக்காக நியமித்திருக்கின்றார் ஆனால் ரஜீவ்காந்த் என்ற நபரின் தலையிட்டினால் குடும்பத்தார் அந்த சட்டத்தரனியையும் தமக்குத் தேவையில்லை என்று நிராகரித்திருக்கின்றனர் . #ஏற்கனவே இந்த வழக்கில் 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பெற்று மேல்முறையீட்டுக்கான நாட்களில் 10 நாட்கள் முடிந்த பின்னரே இலங்கை அரசுக்கு அந்த தகவல் உத்தியோகபூர்வமாக கிடைத்தது #அதேபோல் தற்பொழுது மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்ற போதும் இலங்கை அரசுக்கு இதுவரை உத்தியோகபூர்வ தகவல் கிடைக்கவில்லை எனவே இதன் மூலம் சவுதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்வதற்கான கால அவகாசம் இழக்கப்படுகிறது . #மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்த பின்னரே பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுடன் தொடர்பு கொண்டு பின்னர் தனக்கு உதவி தேவை என வேண்டி உள்ளார் . #தற்போது முற்றுமுழுதான சட்ட உதவிகள் CHRD அமைப்பின் மூலமாகவே மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது #அனோஜனுக்கு மரண தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை கல்முனை வைத்திய சாலையில் முஸ்லிம் தாதியரின் சீருடை விவகாரத்துடன் எவ்வாறு சம்பந்தப்பட்டது என்பதையும் இந்த விடயத்தில் தமிழர் தரப்பு செய்து கொண்டு இருக்கின்ற தவறான விடயங்களையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்