இரட்டை வேடம் போடும் ஐக்கிய நாடுகள் சபையும் உலக ஒழுங்கும் இன்று வரை என் மூளையை குடைந்து எடுக்கும் கேள்வி அமெரிக்காவிற்கு மரண பயம் காட்டிய... அந்த ராக்ஸ் என்னும் உயிரியல் ஆயுதத்தை பயம் காட்டி உலகையே நடுங்க வைத்த.... பெண்கள் குழந்தைகளை கைதிகளாக பிடித்து வைத்து கழுத்து அறுத்து கொலை செய்த..... கைது செய்யப்படும் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த...... அல் கைதா என்னும் அமைப்பின் சிரியாவிற்கான பிரிவு தளபதி, இன்று அமெரிக்காவுடன் இணங்கிப் போனதன் காரணத்தால் உலக உச்ச அரங்கான ஐநா சபையின் பொதுச் சபையில் உரையாற்றுகின்றார் ஆனால் மேலே குறித்த எந்த பாதகச் செயலையும் செய்யாது இனத்தின் விடுதலை ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு தம்முயிரை மாய்த்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் ஏன் தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது? இந்தக் கேள்விக்கு விடை காண முற்படும் போது ஈழத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் இனத்தின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டமும் ஆயுத வலுவும் மட்டும் போதாது அதைவிட முக்கியமானது சர்வதேச நிலைமைகளை ஆராய்ந்து அவர்களின் நலங்களுக்கேற்ப எமது திட்டங்களை மாற்றி அமைத்து சர்வதேச சக்திகளின் நலன்களோடு எமது நோக்கங்களை இணைத்து எமது இலக்கை அடைந்து கொள்வதே புத்திசாலித்தனமானதும் சாத்தியமானதுமான ஒரே வழியாகும் S.Rangan