அத்தியாயம் :1 திருமண மண்டபம் முழுவதும் சொந்தங்களால் நிறைந்திருந்தது.. மாப்பிள்ளையின் அறையில் பேச்சுலர் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது அப்போது வந்த ஒரு போன் கால் அவன் சந்தோஷத்தை முழுவதுமாக புரட்டிப் போட்டது... வேகமாக வெளியில் சென்றான்.. சொந்த பந்தங்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அங்கு மணமகளின் அப்பாவை பார்த்தவன். மாமா உங்க பொண்ணு மேல நான் ஆசைப்பட்டதுனால தான் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணேன் உங்க பொண்ணு எங்க "என்றான் ஆக்ரோஷமாக.. "என்ன சொல்றீங்க மாப்ள என் பொண்ணு அவ ரூம்ல தான் இருக்கா" என்றார் மணிமாறன்... "உங்க மகள் மண்டபத்துல இல்ல மண்டபத்தை விட்டு ஓடிட்டா.. என் ஆளுங்க அவளை துரத்திட்டு இருக்காங்க கொஞ்ச நேரத்துல அவளை பிடிச்சிட்டு வந்துருவாங்க உங்க மகள் கழுத்துல தாலி கட்டி சந்தோஷமா குடும்பம் நடத்தலாம்னு நெனச்சேன்... ஆனா அவள் என்னையே ஏமாத்திட்டு ஓட்டிட்டா ..அவ இங்க வந்தா அவளுக்கு நடக்க போறது சாந்தி முகூர்த்தம்.. "என்று கோபமாக பேசியவன் இப்போது வெளியில் சென்று அவனுடைய காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.. "டேய் சீக்கிரம் அந்த ஓடுகாளிய தேடுங்கடா.. கிடைச்சா அதே இடத்துல வெட்டி கொல்லுங்கள். துரை கையில் கிடைத்தா என் குடும்ப மானம் போய்விடும் "என்றார் மணிமாறன்... நீண்ட தூரம் ஓடிவிட்டாள் மூச்சு வாங்கியது அடுத்த அடி எடுத்து வைப்பதற்கு உடலில் தெம்பு இல்லை என்ன செய்வது, என்று புரியாத ஓர் நிலை துரத்தி வருபவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள் என்பது அவளுக்கு தெரியும்.கையில் சிக்கினால் தன் வாழ்க்கை வீணாகிபோகும் என்பது நன்றாக புரியும்..தன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வேக வேகமாக மீண்டும் ஓட தொடங்கினாள்.. "டேய் அவ இங்க பக்கத்துல தான் டா போறா சீக்கிரம் புடிங்கடா "என்ற சத்தம் அந்த ரவுடிகளோ அவளை துரத்திக் கொண்டு அருகில் வந்து விட்டனர். வேகவேகமாக ஓடியவளை கடந்து வந்து ஒரு கார் மறித்தது. அந்தக் காரை பார்த்தவளுக்கு தன் சப்தநாடிகளும் ஒடுங்கிவிட்டது.. அதிர்ச்சியில் நின்றாள் கண்களில் கண்ணீர் மட்டும் வடிந்தது. வாயில் வார்த்தை வரவில்லை. அதிலிருந்து இறங்கியவன் தன் பட்டு வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவள் பின்னந்த் தலையில் கைவைத்து அவள் தலைமுடியை அழுத்தி பிடித்தவாறு.