ஹபரணை – தேவஸ்தானத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பொலன்னறுவை மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை கார் ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாத்தளை மருத்துவமனை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பொலன்னறுவையிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்தபோதே இவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மருத்துவமனைகளில் பணியாற்றி, அறுவை சிகிச்சைத் துறையில் சிறந்த சேவை ஆற்றிய மருத்துவரின் மறைவு மருத்துவத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.