மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய மழை தீவிரமடையக்கூடும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (14) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், பிற்பகல் 01.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ள தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.












Comments (0)
Be the first to share your thoughts.