மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

​இன்று இரவு 8 மணி 20 நிமிட அளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சொய்சாபுர பகுதியில் உள்ள கடையொன்றில் நின்றுகொண்டிருந்த நபரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

​துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் குறித்த கடையின் உரிமையாளர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

​சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.