ஜூலை 83இன் 43ஆவது ஆண்டு நினைவு. அதை கறுப்பு ஜூலை என்று பொதுவாக அழைக்கிறார்கள்.அதை இன அழிப்பு ஜூலை என்று அழைக்க வேண்டும். அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பும் தங்களுக்குள் மோதிக் கொள்வது.அங்கே அப்படிப்பட்ட மோதல் எதுவும் நடக்கவில்லை. நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அனுசரணை பெற்ற குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். தென்னிலங்கை நகரங்களில் சந்தையை பெருமளவுக்கு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் வணிகர்களை திட்டமிட்டு தாக்கி விரட்டிய,நன்கு […]