அஸ்வசும நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வசும திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில், 13 லட்சத்து 91 ஆயிரத்து 830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11 ஆம் பிரிவுக்கு அமைய, பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேன்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாம் தெரிவு செய்யப்பட்டுள்ள நலன்புரி பிரிவு குறித்து திருப்தியடையாத பயனாளிகளுக்கும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.