வருகிற 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, நேற்று தாராபுரத்தில் பிரசாரம் செய்தார் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போது அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளரான சத்யபாமாவை உருவகேலி செய்வதுபோலப் பேசியிருந்தார்.
ஸ்டாலினின் இந்தப் பேச்சிற்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்துள்ளன. அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு...
தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா
``தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பேச்சுகள் மீண்டும் ஒரு தாழ்ந்த நிலையை எட்டியுள்ளன. அவருடைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் கூட சந்திக்காமல் ரீல்ஸ் எடுப்பதில் மும்முரமாக இருந்த ஒருவரிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?..."
தமிழக அரசியல் களத்தில் திமுகவின் பேச்சுகள் மீண்டும் ஒரு தாழ்ந்த நிலையை எட்டியுள்ளன. அவருடைய ஆட்சி காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் கூட சந்திக்காமல் ரீல்ஸ்…
— Virudhai Magal Keerthana (@Keerthana4VNR) October 2, 2026
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்
``தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரான அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களை...
இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உருவ கேலி செய்யும் வகையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும், குறிப்பாக பட்டியல் இன சமுதாயத்தையும் அவமதித்துள்ளார்.
அரசியல் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!"
தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரான அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களை... இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உருவ கேலி செய்யும் வகையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த பெண்…
— Arunraaj TVK (@arunraajkg) October 2, 2026
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு
``உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில், ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்..."
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான
— வன்னி அரசு (@VanniTamizhVCK) October 2, 2026
அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள்
பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது.
அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில்,
ஆணாதிக்க… https://t.co/jeAIPqYgp3
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
``தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திருமதி. சத்யபாமா அவர்கள், ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்.
தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லும் வகையில், தனது பதவியை ராஜினாமா செய்து மீண்டும் ஜனநாயக முறையில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மக்களின் தீர்ப்பை நாடி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றார்...
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அரசியல்வாதி என்பதற்காக, அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் ஒரு பெண்ணின் சமூகப் பின்னணியையும், உருவ கேலியும், பெண்ணினத்தையும், அவரது அரசியல் முடிவையும் இழிவுபடுத்தும் வகையிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், திருமதி சத்யபாமா அவர்கள் தொடர்பாக தெரிவித்த அருவருக்கத்தக்க கருத்துகளுக்கு விளக்கம் அளித்து, உடனடியாக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பு மக்களுடையதே!
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திருமதி. சத்யபாமா அவர்கள், ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லும் வகையில், தனது பதவியை ராஜினாமா செய்து மீண்டும் ஜனநாயக முறையில், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்… pic.twitter.com/dd172pfSWh
— Viswanathan Perumal (@Viswanathan_INC) October 2, 2026












Comments (0)
Be the first to share your thoughts.