தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர். சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அதில், " சில திரைப்படங்கள் நம் இதயத்திற்கு மிக நெருக்கமாகவே இருக்கும். என்னைப் பொறுத்தவரை, 'மூக்குத்தி அம்மன் - 2' அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். எனது இயக்குநர் சுந்தர்.சிக்கு, உங்களின் தொலைநோக்கு பார்வை, அன்பு, பேரார்வம் அனைத்தையும் இப்படத்துக்குள் கொண்டு வந்ததற்கு நன்றி.
உங்களுடன் பணியாற்றியது உற்சாகமாக இருந்தது. ஒவ்வொரு தருணத்தில் காட்டிய அக்கறைக்கும், இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்காக மிக்க நன்றி. இந்தப் படத்துக்காக நான் உங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.
'ஒன்றிய அரசின் பாதையில் தவெக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை..!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டிஎன் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் சார், இந்தத் திரைப்படத்தை நம்பியதற்கும் எங்களுக்கு ஆதரவளித்ததற்கும் நன்றி. ரெஜினா, உங்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திலும் அன்பும் வெற்றியும் கிடைக்க வாழ்த்துகள்.

குஷ்பு மேம் மற்றும் சினேகா மேம், உங்கள் இருவருடனும் இந்தத் திரைப்படத்தில் பங்கேற்றது நான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு விஷயம். உங்கள் இருவருக்கும் என் பேரன்புகள்.
இப்படிப்பட்ட ஒரு அருமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்கிறேன்.
இப்போது, நாங்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் அனுபவிப்பதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR











Comments (0)
Be the first to share your thoughts.