அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
மேடையில் பேசிய முதல்வர் விஜய், "நான் இன்றைக்கு முதல்வராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, மகனாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?

உங்கள் தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா? ஒரு தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, ஊழலை ஒழிக்கும் ஒரு கட்சியாக, உங்கள் விஜய் வரக் கூடாதா? இந்த தீயசக்தி திமுக நம்மை பார்த்து அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாகப் பேசுகிறார்கள். இன்று நான் சினிமாவில் வென்றதற்கும், அரசியலில் வென்றதற்கும் தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.
திமுக-வினர் அவதூறாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறைமுகமாக மற்றும் பலர் (அதிமுக) ஆதரவு கொடுத்துகொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்களைத் தவறாகப் பேசியவர்கள் உடன் கூட்டணி பேசும்போதே அவர்களின் திட்டம் என்னவென்று தெரிந்துவிட்டது. அவர்கள் முகமூடி கிழிந்துவிட்டது என்று தெரியாமலேயே கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் உங்கள் சகோதரி, என் தங்கைக்கு, மரகதம் குமரவேல் அவர்களுக்கு தயவு செய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இந்த மற்றும் பலர் பாஜகவின் ஒரு கிளை. ஆனால் இப்போது திமுகவின் ஒரு கிளை கழகமாக மாறிவிட்டார்கள். மக்கள் காசை தொட விடமாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம்" என்று பேசியிருக்கிறார்.
முதல்வர் விஜய்யின் உரை தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்.












Comments (0)
Be the first to share your thoughts.